உக்ரைன் மீது பல்முனை தாக்குதல் நடத்தும் ரஷ்ய படை!: தலைநகர் கீவ் நகரை நெருங்கின..இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மீண்டும் அறிவுறுத்தல்..!!

உக்ரைன்: உக்ரைன் மீது பல்முனை தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் அந்நாட்டின் தலைநகர் கீவ் நகரை நெருங்கின. இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் கீவ் நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளன. உக்ரைனின் வடக்கு எல்லையோர நகரங்களான செர்னிஹிவ், சுமி, கார்கிவ், லுகான்ஸ்க் மாகாணங்களில் ஊடுருவி ரஷ்யப்படைகள் தாக்கின. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக உக்ரைனுக்கான இந்திய தூரர் தகவல் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவில் இருப்பவர்கள் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் படிக்கும் மாணவர்களை மீட்டு தர வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதனிடையே தலைநகர் கீவ்வில் தொடர் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் உருவாக்கியுள்ளது. மெட்ரோ நிலையங்கள், சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் கீவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றும் நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், 100க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது….

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்