உக்ரைன் மீதான போரை நிறுத்த உதவுமாறு இந்தியர்களுக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள்

கீவ்: போரை நிறுத்துமாறு ரஷ்ய தூதரகத்திற்கு இந்தியர்கள் அழுத்தம் குடுக்க வேண்டும், இந்தியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகள் பிரதமர் மோடியிடம் ரஷ்ய போர் குறித்து முறையிட வேண்டும் என்று உக்ரைன் தலைநகர் கீவில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக்கொண்டுள்ளார்.இந்தியாவின் விவசாய பொருட்கள் இறக்குமதியில் உக்ரைன் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்படும் உலகளாவிய மற்றும் இந்திய உணவின் பாதுகாப்பின் அடிப்படையிலாவது ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தும்படி இந்தியாவில் உள்ள தூதரகங்களுக்கு இந்தியர்கள் அழுத்தம் குடுக்க வேண்டும் என டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நட்புறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி பிரதமர் மோடியிடம் முறையிட வேண்டும் எனவும் ரஷ்யாவுடன் நட்புறவில் உள்ள சீனா உள்ளிட்ட நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்று டிமிட்ரோ கேட்டு கொண்டுள்ளார். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக உக்ரைன் ஒரு நல்ல வரவேற்பு இல்லமாக இருந்து வந்துள்ளது.ஆனால் உக்ரைன் படைகள் வெளிநாட்டு மாணவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பொய்களை கூறி ரஷ்யா அனுதாபம் தேடுவதாக டிமிட்ரோ கூறியுள்ளார்….

Related posts

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்