உக்ரைன் போரை நிறுத்தும் சமாதான குழுவில் மோடி: மெக்சிகோ பரிந்துரை

பிட்ஸ்பர்க்: உக்ரைன், ரஷ்யா இடையேயான போரை நிறுத்த மோடி, போப் பிரான்சிஸ், கட்டரெஸ் அடங்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க மெக்சிகோ பரிந்துரை செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்துள்ளது. நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுச்சபையின் 77வது அமர்வின் பொது விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களை அணி திரட்டும் புடினின் நடவடிக்கை, அவர் போரை நிறுத்தும் சமாதான பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பதை காட்டுவதாக கூறினார்.இந்நிலையில், மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ லூயிஸ், `உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த, இந்திய பிரதமர் மோடி, போப்பாண்டவர் பிரான்சிஸ், ஐநா பொதுச் செயலாளர் கட்டரெஸ் அடங்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க வேண்டும்,’ என்று பரிந்துரை செய்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் முன்மொழிந்த திட்டத்தையே தற்போது வழிமொழிந்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்….

Related posts

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் வெயில்; இதுவரை 568 பேர் உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி