உக்ரைனுடனான மோதலின் போது ரஷ்ய துணை தளபதி மரணம்

கீவ்: உக்ரைன் படைகளுடன் ஏற்பட்ட மோதலின் போது ரஷ்ய மூத்த தளபதியான விட்டலி ஜெராசிமோவ், கார்கிப் பகுதியில் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ராணுவ உளவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்ய ராணுவத்தின் 41வது பிரிவு துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ், உக்ரைன் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் பலியானார். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் உளவுத்துறை தெரிவித்த தகவலை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிசெய்யவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி இறுதியில் ரஷ்ய ராணுவ மூத்த அதிகாரியான ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி, உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டார். நேற்று மற்றொரு ராணுவ துணை தளபதியும் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது, உக்ரைன் படைகள் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்றதாக கூறியுள்ளது. …

Related posts

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு