உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதிஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்காக ரூ.3.5 கோடி நிதிஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அயலகவாழ் தமிழர்நல ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுவிற்க்கான பயணச்செலவு என ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டுஉள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு பணிகளை உடனடியாக விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழக மாணவர்களை அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்து விரைந்து மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வெளியுறவு அமைச்சரை சந்தித்து தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி இருந்தது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை