உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்ட மாநில, ஒன்றிய அரசுகளுக்கு நன்றி: ஆற்காடு மாணவர் உருக்கம்

ஆற்காடு: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு புதுத்தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் அருணாசலம் (20) நேற்று முன்தினம் இரவு அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஆற்காடு அழைத்து வந்தனர். இந்நிலையில் மாணவர் அருணாசலம் கூறியதாவது:உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக இந்திய மாணவர்கள் பலர் கார்கிவ் நகரிலிருந்து லிவிங் நாட்டிற்கு ரயில் மூலம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் எங்களை இந்தியா அழைத்து வந்தனர். கார்கிவ் நகரில் இருந்து ரயிலில் வரும்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. பல நேரங்களில் வெடிச்சத்தம் கேட்கும்போது விளக்குகளை அணைத்து ரயிலை நிறுத்தி விடுவார்கள். வெடி சத்தம் கேட்கும்போது பயணிகள் பீதியடையாமல் இருக்க பாடல்களை ஒலிக்க செய்தனர். மற்ற நாட்டவர்கள் விட இந்திய அரசு, மாணவர்களை அழைத்து வர சிறப்பான ஏற்பாடுகளை செய்தது. அதேபோல் தமிழக அரசும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்களது மருத்துவ கல்வி கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் நாங்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 46 புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலைகள் 1.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்