உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போரின் காரணமாக அங்கு பயின்ற மருத்துவம் பயின்ற 2000 மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே அதிகளவிலான மருத்துவ மாணவர்கள் உக்ரைனிலிருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு இதுதொடர்பாக முழு ஒத்துழைப்பை அளிக்கும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தகுந்த மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளார், மேலும் மருத்துவ மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஒன்றிய அரசின் முடிவால் மருத்துவ மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை