உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்!: சாலைகளில் சிதறிக்கிடக்கும் சடலங்களின் கோர காட்சிகள்..!!

கீவ்: உக்ரைனின் புச்சா என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டு சடலங்கள் சிதறி கிடந்த நிலையில், அதற்கு காரணம் யார் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. ரஷ்யாவின் கோர தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகே உள்ள புச்சா நகரில் சாலைகள் தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் சிதறி கிடக்கும் கோரக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் நிலையில், உக்ரைனின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள், தலைநகர் கீவ்வை ஒட்டிய புச்சா நகரில் அப்பாவி மக்கள் சுமார் 300 பேரை தலையில் குறிவைத்து படுகொலை செய்து புதைகுழிகளில் வீசிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. பல இடங்களில் பல சடலங்கள் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு, வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இருந்தது. இந்த காட்சிகள் தனக்கு பேரதிர்ச்சியை தந்ததாக ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுயேச்சையான விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து தடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா தான் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கனும், இச்செயலை கண்டித்திருந்தார். இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் படுகொலைகளை செய்துவிட்டு தங்கள் மீது குற்றம்சாட்டுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளால் ஒரு பொதுமக்கள் கூட உயிரிழக்கவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். …

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி