உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைப்பதில் சிக்கல்: ரஷ்ய அதிபரின் உத்தரவால் பதற்றம்..!

மாஸ்கோ: அவரசத்தால் உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை விரும்பாத ரஷ்யா தனது நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கூறி அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. இப்போர் 9 மாதங்களை கடந்து நீடிக்கிறது.  இதில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வழங்கி வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா சமீப காலமாக ராக்கெட், ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. இதனிடையே உக்ரைனில் தான் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனது நாட்டோடு இணைத்துக்கொள்வதாக ரஷ்யா அதிபர் அறிவித்தார். ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் வழக்கம்போல ரஷ்யா அந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், தாங்கள் இணைத்துக்கொண்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொசான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை இணைப்பதில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ரஷ்யா அதிபர் புதின்; இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதில் மிகுந்த சிக்கல் நிலவி வருவதாகவும், எனினும் விரைவில் அவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்றும் புதின் கூறியுள்ளார். இது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்