ஈரோட்டில் எஸ்கேஎம் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு எஸ்கேஎம் என்ற பெயரில் கால்நடை தீவன உற்பத்தி, முட்டை மற்றும் முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருத்துவமனை, சித்த மருந்து உற்பத்தி ஆலை மற்றும் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் தலைவராக எஸ்.கே.மயிலானந்தன் உள்ளார். அவரது மகன்கள் ஸ்ரீ சிவ்குமார், சந்திரசேகர் ஆகியோர் நிர்வாக இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்டம் சோளாங்கபாளையத்தில் உள்ள முட்டை ஏற்றுமதி நிறுவனம், நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ஆயில் நிறுவனம், உட்பட 11 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட கார்களில் 70க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு