ஈரோட்டில் இன்று முதல் விசைத்தறிகள் மீண்டும் இயக்க முடிவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் கடந்த சில வாரங்களாக ராயன் துணிக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி முதல் நேற்று வரை  விசைத்தறியாளர்கள் ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்நிலையில், ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்  அவசர ஆலோசனை கூட்டம் நேற்று அச்சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இந்த  கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை 11ம் தேதி (இன்று) முதல் திரும்ப பெற்று,  மீண்டும் வழக்கம்போல் இயக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகி கந்தவேல் கூறுகையில், ‘‘தமிழக  கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி, எங்களது  கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக விரைவில் விலையில்லா வேட்டி உற்பத்தி  தொடங்க ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதைத்தொடர்ந்து விலையில்லா  சேலை உற்பத்திக்கு ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.  இதன்பேரில், எங்களது விசைத்தறி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்’’ என்றார்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்