ஈரோட்டில் இன்றும், நாளையும் மின் தடை

 

ஈரோடு, ஆக. 9: ஈரோடு மூலப்பாளையம் பிரிவு அலுவலகம் ஈபி நகர் மின் பாதையிலும், காஞ்சிக்கோயில் மின் பாதையிலும் பராமரிப்பு பணிகள் இன்று (9ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், ஈபி நகர், வாய்க்கால் மேடு, கக்கன்ஜி நகர், ஜேசிஸ் பள்ளி பஸ் ஸ்டாப் பகுதி, தெற்கு ஸ்டேட் பேங்க் நகர், அப்பாச்சி நகர், முத்துசாமி காலனி, சின்ன சடையம்பாளையம், திருப்பதி கார்டன், வேலாம்பாளையம், காட்டுவலசு, மணியக்காட்டூர், ஆயகவுண்டனூர், பெரியகவுண்டன்வலசு, கருப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் கரட்டுப்பாளையம் மின் பாதையிலும், கொளத்துப்பாளையம் மின்பாதையிலும் பராமரிப்பு பணிகள் நாளை (10ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆலுச்சாம்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், ஊணான்காட்டு வலசு, ஜே.ஜே.நகர், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, சந்திராபுரம், பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, பட்டைகாளிபாளையம், காளிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கொக்கி மாட்டி மின்சாரம் திருட்டு: பஞ்சாயத்து செயலாளருக்கு ₹90 ஆயிரம் அபராதம்; மின் வாரியம் அதிரடி

மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 876 மனுக்களுக்கு தீர்வு

அரசு போக்குவரத்து கழகத்தில் போதைப் பொருள் தடுப்பு: சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு