ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள்

 

ஈரோடு, செப். 13: ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், இரண்டாம் கட்டமாக 2,000 டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்து.

பின்னர், நெல் மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவிநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு

திருச்சூர் அருகே கயிறு இழுக்கும் போட்டியில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து