ஈரோடு மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தேர்வு 15ம் தேதி தொடக்கம்

 

ஈரோடு, செப்.13: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் வருகிற 15ம் தேதி தொடங்க உள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வருகிற 19ம் தேதி முதலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வருகிற 15ம் தேதி முதலும் தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ் 1 மற்றும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலையிலும், பிளஸ் 2 மற்றும் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதியமும் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடக்கும் காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து 28ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் அக்.3ம் தேதி திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகளிலேயே வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து