ஈரோடு மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்வு

 

ஈரோடு, ஜன.1: ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து வாரந்தோறும் கடல் மீன்கள் சுமார் 20 டன் அளவிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில், இந்த வாரம் ஈரோடு மார்க்கெட்டிற்கு காரைக்கால், நாகப்பட்டினம், கேரளா பகுகிளில் இருந்து 12 டன் அளவிற்கு மீன்கள் வரத்தானது. மீன்கள் வரத்து குறைந்ததால், இந்த வாரம் பெரும்பாலான மீன்களின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையும், சில மீன்கள் விலை குறைந்தும் விற்பனையானது.

இதில், ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையாகின மீன்களின் விலை விவரம் (கிலோவில்) அயிலை-ரூ.280, பெரிய இறால்-ரூ.800, சாலமன்-ரூ.800, முரல்-ரூ.480. சங்கரா-ரூ.350, கிளி மீன்-ரூ.700, மத்தி-ரூ.200, தேங்காய்பாறை-ரூ.550, வெள்ளை வாவல்-ரூ.850, கருப்பு வாவல்-ரூ.675, உளிமீன்-ரூ.450, மதன மீன்-ரூ.450, மயில் மீன்-ரூ.750, பார் நண்டு-ரூ.350, ப்ளூ நண்டு-ரூ.690 ஆகிய விலைகளில் விற்பனையானது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை