ஈரோடு மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அமல்

 

ஈரோடு,ஜன.6: ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு அரசாணைப்படி டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஈரோடு மாநகராட்சியில் 1300க்கும் மேற்பட்ட தினக்கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் துறை அரசாணை படி மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊதியத்தை குறைத்து நிர்ணயித்து நாளொன்றுக்கு ரூ.687 வீதம் வழங்கி வந்தது.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்த ஏஐடியுசி, சிஐடியு உள்ளி்ட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு தொழிலாளர்துறை சார்பில் கடந்த வாரம் ஈரோட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது தொழிற்சங்கங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியத்தை அரசாணைப்படி நாளொன்றுக்கு ரூ.724 வீதம் உயர்த்தி வழங்கியுள்ளது.மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மற்றும் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்