ஈரோடு மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஆணையாளராக நியமனம்

 

ஈரோடு, அக்.18: ஈரோடு நகராட்சியாக இருந்து 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து ஆணையாளர் பதவிக்கு, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர்களும், கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர்களும் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இதில், ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஆணையாளராக பணியாற்றி வரும் ஜானகி ரவீந்திரன் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர் ஆவர்.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியாக சிவகிருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்து, அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். சிவகிருஷ்ணமூர்த்தி மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி, அங்கிருந்து பணியிடம் மாற்றம் பெற்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஆணையாளராக பணியாற்றி வரும் ஜானகி ரவீந்திரன் பணியிட மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை