ஈரோடு மழை பொழிந்து விவசாயம் செழிக்க சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா யாகம்‌

 

சத்தியமங்கலம், செப்.25: சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், அனைத்துத்துறைகள் வளரவும் சதசண்டி மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 22-ம் தேதி காலை மங்கள இசை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும் அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. நேற்று கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் முன்பு பெரிய யாக குண்டம் அமைக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க நடத்தப்பட்ட சதசண்டி மஹா யாக பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  கோயிலுக்கு வந்த திரளான பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி