ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் சிட்டி சென்டர் திறப்பு விழா

 

ஈரோடு, நவ.25: ஈரோடு, பெருந்துறை ரோடு, வேலவன் நகரில், இயங்கி வரும் ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் சிட்டி சென்டர் திறப்பு விழா, ஈரோடு மேட்டூர் ரோட்டில்,அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இதை மாருதி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் சேர்மன் டாக்டர்.எம்.என். சதாசிவம் தலைமை விருந்தினராகவும்,ஈரோடு டிரஸ்ட் ஹாஸ்பிடல் தலைவர் எஸ்.காளி கவுண்டன் சிறப்பு விருந்தினராகவும், பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.முன்னதாக ஈரோடு கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேலவன், இயக்குனர் பொன்மலர் ஆகியோர் வரவேற்றனர்.

இதுகுறித்து டாக்டர் வேலவன் கூறும் போது:புற்றுநோயின் அறிகுறிகள் முதலிலே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகள் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம். எனவே பொதுமக்கள் வசதிக்காக இந்த சிட்டி சென்டர் மூலம் புற்றுநோய் தடுப்பு ஆலோசனை, வருமுன் புற்றுநோய் பரிசோதனைகள்,புற்றுநோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை, உட்புற கதிர்வீச்சு சிகிச்சை, போன்ற புற்று நோய்களின் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பயிர் காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு

கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல இரு அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால்: இரவு நேரத்தில் பயணிகள் அவதி

திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை