ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத தன்னார்வலர்கள் நியமனம்

 

ஈரோடு, ஜூன் 13: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை எழுத தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களது பிரச்னைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு மனு எழுத கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் இருக்கும் சிலரை அணுகி தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி வாங்கி செல்வர். இதற்கு மனு எழுதுபவர்கள் கட்டணம் பெறுவது வழக்கம். இதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து அப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து மனுவாக எழுதி கொடுப்பதற்காக 2 பெண் தன்னார்வலர்களை நியமித்துள்ளார். அவர்கள், பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்கின்றனர். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதனால் கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்