இ-சேவை மையத்தில் போலி மருத்துவர் முத்திரை பயன்படுத்திய பெண் கைது

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இ-சேவை மையத்தில் போலி மருத்துவர் முத்திரையை பயன்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேற்கு தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இ-சேவை மையம் உள்ளது. இங்கு, மூதாட்டி ஒருவர் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்தபோது அவருக்கு போலி மருத்துவர் முத்திரை மற்றும் அந்த மருத்துவரின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், நேற்று இ-சேவை மையத்தில் தாம்பரம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு போலி முத்திரை மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.  இதனால், அங்கிருந்த மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சசிகலா (34) என்ற பெண் நிர்வாகியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது