இளையான்குடி அருகே பெருமத்தாய் கோயிலில் குடமுழுக்கு விழா

இளையான்குடி, செப்.11: இளையான்குடி அருகே வடக்கு சமுத்திரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெருமத்தாய் கோயிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செப்.8ம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதல் காலயாக பூஜையும், செப்.9ம் தேதி பூர்ணாகுதி மற்றும் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், செப்டம்பர் 10ம் தேதி நான்காம் கால யாக பூஜை மற்றும் ஐந்தாம் காலயாக பூஜை நடைபெற்றது.

காலை 7 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, நடைபெற்று, காலை 10.05 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின் மகா தீபாராதனை காட்டப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் வடக்கு சமுத்திரம், தெற்கு சமுத்திரம், பரத்தவயல், அய்யம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொன்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் வடக்கு சமுத்திரம் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்