இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு சாகச விருது

 

கிருஷ்ணகிரி, மே 28: இளைஞர்கள் விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் சார்பில், 2023ம் ஆண்டிற்கான(2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவர்கள்) டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சாகச துறைகளில் உள்ள நபர்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

இளம் வயதில் வீர-தீர செயல் புரிந்தவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், குழு உறுப்பினர்களாகவும், சரியான நேரத்தில், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவர்களாகவும், பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீர-தீர செயல்புரிந்தவர்கள் இவ்விருதுக்கு தகுதியானவர்கள். இவ்வீரதீர செயல் மலையேற்றத்திற்கும், அதாவது மூன்று நிலைகளில் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவர்கள் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவர். இவ்விருது பெறுபவர்களுக்கு, ₹15 லட்சம் வழங்கப்படுவதுடன், வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டைகொண்டபிளேசர் ஆகியவை வழங்கப்படும். இவ்விருதிற்கு இணையதள முகவரி மூலம், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்