இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார்

சென்னை: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் உள்ளிட்டோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நிருபர்களிடம் பேசியதாவது: குமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டு படுகொலைகள் நடக்கும் என்பது போலவும், அப்படி மீண்டும் மனித வெடிகுண்டுகள் நிகழ்வு நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது போலவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன், சீமான் அமர்ந்து இருக்கும் மேடையில் பேசியிருக்கிறார். இது சீமானுடைய தூண்டுதலின் பெயரில்தான் இது நடந்து இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் சீமானை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கிற இளைஞர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமிழ் மண்ணிற்கும் சீமானால் ஆபத்து ஏற்படுகின்ற சூழல் இங்கே இருக்கிறது. தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை