இளம் பெண்ணிடம் சில்மிஷம் வடமாநில தொழிலாளிக்கு தர்ம அடி

மார்த்தாண்டம், ஜூலை 26: குழித்துறை வாவுபலி பொருட்காட்சிக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளிக்கு தர்ம அடி விழுந்தது. குழித்துறையில் தற்போது வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து குடும்பத்துடன் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது போலீஸ் பாதுகாப்பு இன்மையால், இரவில் மது அருந்தி விட்டு வரும் கும்பல்கள் ரகளையில் ஈடுபடுவதுடன், பெண்களையும் கேலி கிண்டல் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பொருட்காட்சி திடலில் ஜெயின்ட் வீல் ராட்டினம் பார்க்க இளம்பெண்கள் சிலர் வந்தனர். அப்போது இளம்பெண்ணிடம் திடீரென வடமாநில தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இளம்பெண் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த மக்கள் வட மாநில தொழிலாளியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் தொழிலாளியின் செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் உள்பட பல பெண்களை அவர் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கிருந்த தீயணைப்பு துறையினரிடம் தொழிலாளி ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு