இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்கு

 

தஞ்சாவூர், மே 18:இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டம் அருகே காட்டுவெளி பகுதியில் கடந்த 12ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று கீழே விழுந்த மயிலாடுதுறையை சேர்ந்த 2 இளஞ்சிறார்கள் உயிரிழந்தனர்.மேலும் ஒரு இளஞ்சிறார் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் இளம் சிறார்கள் ஓட்டி வந்த வாகனத்தில் உரிமையாளர் மயிலாடுதுறையை சேர்ந்த கோமதி என்பதும் இளம் சிறார்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதை அறிந்தே கோமதி, விக்னேஷ் ஆகியோர் வாகனத்தை ஓட்ட வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே இந்த விபத்துக்கு காரணமான கோமதி, விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இளம் சிறார்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு வாகனத்தைக் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம்