இளம்பெண் மாயம்

தவளக்குப்பம், ஜூன் 7: நோணாங்குப்பத்தில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் ஈஸ்வரன் நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (47). ஆசாரி வேலை செய்யும் இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் இந்திரா (19) 12ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீரபத்திரன் ஆசாரி வேலைக்கும், மனைவி கீதா கட்டிட வேலைக்கும் சென்று விட்டனர். மகள்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் வேலை முடிந்ததும் மாலையில் இருவரும் வீடு திரும்பிபோது வீட்டில் இருந்த பெரியமகள் இந்திராவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அக்கப்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து வீரபத்திரன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்