இளம்பெண் குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல்: மதுரையில் 4 பேர் மீது வழக்கு

 

மதுரை, ஆக. 28: இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதுடன், அதனை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தையை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த ஒரு இளம்பெண், சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிவன்பாண்டி என்பவர் அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்த அந்தப் பெண் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

இல்லாவிட்டால் குளிக்கும் வீடியோவை அனைவரும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தந்தை, சிவன்பாண்டியிடம் தட்டிக்கேட்டுள்ளோர். அப்போது சிவன்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் சிவன்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்