இளந்திரைகொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி

ராஜபாளையம், ஜூன் 27: ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளந்திரை கொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடைபெற்றது. ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியில் கோடை உழவு, தரமான விதை தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்தல், மண் பரிசோதனை மற்றும் வேளாண்மை துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி உதவி இயக்குனர் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் மோகன் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருள் மற்றும் உயிரி உரங்களின் பயன்கள் பற்றி பேசினார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் பாலகுரு கலந்துகொண்டு கொள்முதல் நிலையம் அமைத்தல்,

வணிக ரீதியான வேளாண் இடுப்பொருட்கள் கொண்டு செல்தல், களம் அமைத்தல் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வேளாண் ஆலோசகர் தூண்டிகாளை கலந்து கொண்டு மண்வள மேலாண்மை, உரமேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் பசுந்தாள் உரம் மற்றும் தக்கை பூண்டு, உழவன் செயலி ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் வனஜா, பட்டறிவு பயணம் செயல் விளக்கம், பயிற்சி பண்ணை பள்ளி பற்றி எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜான்பாண்டியன் மற்றும் பத்மாவதி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்