இல்லம் தேடிக் கல்வி சார்பில் அறிவியல் கோடைத்திருவிழா

துவரங்குறிச்சி, மே 4: தொட்டியபட்டியில் இல்லம் தேடிக் கல்வி சார்பில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் கோடைத்திருவிழா நடைபெற்றது.திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் தொட்டியபட்டியில் வானவில் மன்றமும் இல்லம் தேடிக் கல்வியும் இணைந்து ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை கோடைத்திருவிழவாக நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு அறிவியலும், கணிதமும் எளியமுறையில் கற்றுத்தரப்பட்டன இதன் மூலம் மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் பாடத்தில் முழுமையான மதிப்பெண் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பம்மாள் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சபீனா சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் ஜெயசீலி வாழ்த்துத்துரை வழங்கினார்.ஆசிரியர்கள் கோகிலா, சபீதா, வானவில் மன்ற தன்னார்வலர்கள் நந்தினி, தேன்மொழி, சவுமியா இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சுபலட்சுமி, நித்யா, சாந்தி மற்றும் மருங்காபுரி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை