இல்லத்தரசிகளுக்கு ‘ஷாக்..’: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்‍கு ரூ.112 உயர்ந்து ரூ.36,472க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்‍கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று சற்று குறைந்தது. தற்போது 2ம் நாளாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து, சவரனுக்கு சவரனுக்‍கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,559க்கும், ஒரு சவரன் ரூ.36,472க்கும் விற்பனை ஆகிறது.24 கேரட் தங்கம், 8 கிராம் ரூ.39,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.65.10க்கும், ஒரு கிலோ ரூ.65,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,521 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,521 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,521 ஆகவும், கேரளாவில் ரூ.4,518 ஆகவும், தலைநகர் டெல்லியில் ரூ.4,521 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,521 ஆகவும், கோயம்புத்தூரில் ரூ.4,726 ஆகவும் உள்ளது. …

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது