இலை தலைமையை மிரட்டி அரசு பதவியை வாங்கி கெத்து காட்டிய நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காசுக்காக தட்டை தூக்க சொன்ன தாமரை கட்சி நிர்வாகியால் யார் அதிர்ந்து போனாங்க…’’என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்துல தேர்தல் நிதி என்றாலே பஸ் நிலையம், மார்க்கெட், மக்கள் கூடும் இடங்களில் உண்டியல் ஏந்தி வீரமுழக்கமிட்டு வசூல் செய்வதை பார்த்து இருப்போம். ஆனால் தமிழகத்தின் புது கலாசாரமாக தாமரை கட்சியும் மாநாடு நிதி வசூலிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்… சிலர் அதனால அலற ஆரம்பிச்சுட்டாங்களாம். நிஜக்கதையை சொல்றேன் கேளு… மலர்ந்தே தீரும் என்ற உணர்ச்சி மிகு கோஷம் ஒரு புறம் எழுந்தாலும், மலரவே மலராது என்பதில் தாமரையின் எதிர் தரப்புகள் உறுதியா இருக்காங்க. ஆனாலும் யார் முதல்வர் என கை காட்டும் இடத்தில் இருப்பதாக தாமரை கட்சி நிர்வாகிகள் உற்சாக குரல் எழுப்பிக்கிட்டு இருக்காங்க என்பது நாம் அறிந்த சேதி. இதற்கிடையில் தாமரை கட்சியின் இளைஞரணி மாநில மாநாட்டை, தமிழக விவிஐபியின் சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்துல நடத்த திட்டமிட்டிருக்காங்களாம். இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்துல நடந்துச்சி. அதுல பேசுன இளைஞரணி தலைவரு, அள்ளி விட்டதை பார்த்து தாமரை கட்சிக்காரங்க புல்லரிச்சு போயிட்டாங்களாம்… அப்போது, மாங்கனி மாவட்டத்தில் மாநாட்டை மாநிலமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தணும். இதற்காக இப்போதிலிருந்தே கடை கடையா வசூல் பண்ணுங்க. தனியா போகாம, பத்து பத்து பேரா போங்க. நீங்க கேட்கும் பணத்தை கொட்டிக்கொடுக்க வியாபாரிகள் தயாரா இருக்காங்க’’ன்னு சொன்னது தான் புல்லரிப்புக்கு முக்கிய காரணமாம். ஏற்கனவே டான்கள் எல்லாம் நம்ம கட்சியில சேருறாங்கன்னு பேரு, ரிப்போர் ஆகியிருக்கு. இதுல பத்து பத்துபேரா போயி, கடை கடையா வசூல் பண்ணினால் கொஞ்சநஞ்சம் இருக்கிற பேரும், டேமேஜ் ஆகிரும் என்று அப்பாவி தொண்டர்கள் புலம்பினதும் அப்போது காதில் விழுந்ததாம். நாம யாரு பெயரை சொல்லி பணத்தை கேட்பது.. அவங்களுக்கு தாமரை என்றால் ெதரியுமா…’’ என்று புலம்பி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கமிஷனை வாங்காமல் டிரான்ஸ்பர் கிடையாது என்று நிர்வாகம் நினைக்க… எலக்‌ஷன் வந்தா தானாக டிரான்ஸ்பர் போட்டு தானே ஆகணும்னு வசூலித்த கமிஷனை பதுக்கிய பெண் அதிகாரி பற்றி ெசால்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின் கிராம வளர்ச்சித்துறையில் ‘மூன்றெழுத்து’ அதிகாரியானவர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருகிறார். குண்டூசி முதல் குப்பைத்தொட்டி வரை இவரின் கண்காணிப்பில் தான் வாங்கப்படுமாம். தேர்தல் நெருங்குவதால் கட்டாயம் இவரை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனாலும் இதுவரையான வருவாயில் ‘தன் துறைக்குரிய மேலிடத்திற்கு’ கமிஷனை தராமலேயே இழுத்தடித்து வருகிறாராம். ‘தலைமை அலுவலகத்தில்’ இவருக்கு செல்வாக்கு இருப்பதால், கமிஷன் மொத்தத்தையும் கொண்டு சென்று விடலாமென்கிற அச்சம் ‘மேலிட’ தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. பல லட்சங்கள் வர வேண்டியதிருப்பதால், பணியிட மாற்றத்துக்கும் முன்னதாக ஜல் ஜீவன் மிஷன் துவங்கி தார்சாலை பணிகள் வரையிலும் தர வேண்டிய 7 சதவீதத்தை கணக்கிட்டு வசூலிப்பதில் மும்முரம் காட்டத் துவங்கி இருக்கிறார்களாம். இப்படியாகவே மாவட்டத்தின் பல்வேறு துறைகளிலும் கூடுதல் காலம் பணியிலிருப்பவர்கள் தர வேண்டிய கமிஷனை, பெறுவதற்கான முயற்சி தீவிரமாக நடக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தலை மனதில் வைத்து இலை நிர்வாகி தலைமையை ஆட்டி வைத்த கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் கைகட்டி கட்சி பணி பார்த்தது எல்லாம் ஒரு காலம். கட்சி பதவி வரும், போகும் என்பது அந்த கட்சியினருக்கே தெரியாது. இவை எல்லாமே அந்தம்மா மறைவுக்கு முன்தான். தற்போது கட்சியை மிரட்டினால் பதவி தேடி வருமாம். அந்த அளவுக்கு இலை கட்சியினர் துணிந்து விட்டனர். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் முத்து விளையும் மாவட்டம். அந்த ஊரில் சமீபத்தில் இரண்டு எழுத்து இனிசியல் கொண்ட முன்னாள் அமைச்சர் கோஷ்டியினர் தனியாக ஒரு கூட்டம் நடத்தியுள்ளனர். முதல்வரின் சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டுதான் இந்த கூட்டத்தை நடத்தினார்களாம் அவரது ஆதரவாளர்கள். முன்னாள் அமைச்சரான செல்லமானவருக்கு முதல்வரின் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பதவி தர வேண்டும், தராத பட்சத்தில் அடுத்தகட்டமாக (ஜன.2 ம் தேதி) முதல்வர் வருகைக்கு முன்னதாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதுதான் அந்த கூட்டத்தின் தீர்மானமாம். இதை உளவுத் துறையினரும் ஆட்சி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில், ஏதாவது குழப்பம் வந்து விடக் கூடாது என நினைத்த ஆட்சித் தலைமை செல்லமானவருக்கு வேளாண்மை விற்பனைக் குழுவில் முக்கிய பதவியை உடனே வாரி வழங்கியது. இந்த பதவியையும் நேற்று செல்லமானவர் ஏற்றுக் கொண்டார். இதனால் எங்களது பலத்தை காட்டி விட்டோம் என செல்லமானவரின் தரப்பு உற்சாகத்தில் உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா