இலுப்பூர் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்

 

விராலிமலை, மே 28: இலுப்பூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் இலுப்பூர் பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலர் பொக்லேன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு டிப்பர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இலுப்பூர் போலீசார் இரவு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 25ம்தேதி இரவு பாக்குடி பேருந்து நிலையம் அருகே மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் மணல் அள்ளி வருவதற்கான அரசின் உரிய அனுமதி இல்லாமல் ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை 1 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் லாரி உரிமையாளர் இருந்திராபட்டி ஊராட்சி சத்தியநாதபுரத்தை சேர்ந்த பொன்னையா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு