இலுப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

விராலிமலை, ஜூலை 7: இலுப்பூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவரை கைது செய்த போலீசார் வழக்குபதிந்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் உள்ள சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இலுப்பூர்- விராலிமலை சாலை மேட்டுப்பட்டி சுந்தரம் என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மேலபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பொன்னுச்சாமியை (45) கைது செய்து, விற்பனைக்கு இருந்த 361 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீஸார் எச்சரித்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை