இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது

இலுப்பூர்: கோயம்புத்தூரை சேர்ந்த பெண், லோன் பெறுவதற்கு காணாமல் போன பத்திரத்தின் நகல் பெறுவதற்கு இலுப்பூரில் பத்திரம் காணாமல் போனதாக போலிசான்றிதழ் பெற்றது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமினில் வந்தனர்.இந்நிலையில் இலுப்பூர் போலீசார் நேற்று இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இலுப்பூர் காவல் நிலையத்திற்கு பத்திரம் காணாமல் போனதாக வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மை தன்மை குறித்து விசாரணைக்கு வந்தனர். இதில் இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எஸ்ஐ ஆக பணியாற்றியவாின் கையெழுத்து போட்டு போலியாக ஆவணம் தயாரித்தது தொிய வந்தது. இது தொடர்பாக கோயம்புத்தூர் தாமரை நகரை சேர்ந்த சங்கீதா. இதற்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த மனோகரன் மற்றும் பொியநாயக்கன் பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 3 பேரை இலுப்பூர் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வந்த நிலையில் நேற்று அதிமுக வழக்கறிஞர் அணியை சோ்ந்த பாபு என்பவரை இலுப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். …

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!