இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும்

 

அந்தியூர், ஜன.20: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பங்களை எம்எல்ஏ அலுவலகத்தில் வழங்குமாறு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி வெங்கடாசலம் கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஆய்வுக்கூட்டம் அந்தியூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக நெசவாளரிடமிருந்து இலவச மின்சார இணைப்பு வேண்டி 567 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இதனை எம்எல்ஏ வெங்கடாசலம் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் எம்எல்ஏ பேசும்போது:

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர் பெருமக்கள் தமிழ்நாடு அரசின் மூலம் அனைத்து சலுகைகளையும் குறுகிய காலத்தில் அனைத்து நெசவாளர்களும் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது அனைத்து நெசவாளர் பெருமக்களும் இலவச மின்சாரம் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்