இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தொடங்கியது

 

திருப்பூர், ஜூலை 8: தொலைதூரத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளிகளுக்கு வருகை புரிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மேல்நிலை முதலாமாண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. 2024-25ம் கல்வி ஆண்டிற்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குவதற்காக உதிரிபாகங்கள் பகுதிவாரியாக அரசு பள்ளிகளுக்கு வந்தடைந்தது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ராயபுரம் ஜெய்வாபாய் பள்ளிக்கு வந்த உதிரிபாகங்களை பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்,“விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் மாணவ மாணவியர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.‌ இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்குவதற்காக உதிரி பாகங்கள் வந்தடைந்து அதனை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் உதிரிபாகங்கள் பொருத்தும் பிட்டிங் பணி முழுவதுமாக நிறைவடையும். விரைவில் சைக்கிள் மாணவிகளுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை