இலவச சர்க்கரைநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

 

தொண்டாமுத்தூர்,மார்ச்11: கோவை பேரூர் அருந்ததியர் சமூக கூடத்தில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூர் அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் மாறன் முன்னிலை வகித்தார்.

முகாமினை பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.முகாமில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாவட்ட துணை செயலாளர் எம்.என்.கே செந்தில்குமார்,துணை ஆட்சியர் (ஓய்வு) சுகுமாறன்,கவுன்சிலர்கள் மணிமேகலை, சண்முகம், அறக்கட்டளை உறுப்பினர்கள் வெங்கடாசலம்,பரமசிவம், இருகூர்பழனிச்சாமி,சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை,கண் பரிசோதனை உடல் கொழுப்பு,தோலடிகொழுப்பு, ள்ளுறுப்பு கொழுப்பு, உடல் நீர் பரிசோதனை ஆகியவை நடைபெற்றது. நீரழிவு நோயின் சிக்கலை தவிர்ப்பது எப்படி? மாரடைப்பு, மூளை பக்கவாதம்,சிறுநீரக செயலிழப்பு, கண் பிரச்னை, தோள்பட்டை வலி, முழங்கால் வலி குறித்து இலவச ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை பேரூர் அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை, நீலு மெடிக்கல் சென்டர்,டயாபெடீஸ் பவுண்டேசன் செய்திருந்தது. முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை