இலவச சட்ட உதவி எண் குறித்து விழிப்புணர்வு

நாமக்கல், அக்.5: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண் 15100, மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இணையவழி முகவரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பர பலகை மற்றும் கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி வேலுமயில், நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபா சந்திரன், குடும்ப நல நீதிபதி பாலகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், முதன்மை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி தங்கமணி, மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது, அரசு வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்களாக பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தை, கலெக்டர் அலுவலகம், காவல் நிலையம், தாலுகா நீதிமன்றங்கள், சட்ட உதவி மையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பல இடங்களில் வழக்கறிஞர்கள், நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், சட்ட தன்னார்வலர்கள் மூலமும் கை பிரதிகள் ஒட்டியும், பொது மக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை