இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: வருகிற கல்வியாண்டில் இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-11ம் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், வருகிற 2022-23 கல்வியாண்டில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளம் சென்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு மேற்கூறிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் பிடிபட்டார்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா