இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க கோரிக்கை

 

ராமநாதபுரம்,அக்.1: இலங்கை சிறையில் இருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமேஸ்வரம் ஞானசீலன் விசைபடகு மீனவர் நலச்சங்கம் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த செப்.28ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்க விசைப் படகில் 17 மீனவர்கள் சென்றனர். பாரம்பரிய எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 17 மீனவர்களையும் கைது செய்து, விசை படகையும் பறிமுதல் செய்தது.

தற்போது இலங்கை சிறையில் மீனவர்கள் இருப்பதால் குடும்பத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பமும் வறுமையில் வாடுகிறது. எனவே சிறையில் உள்ள 17 மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட படகையும் மீட்க மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி