இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த விசைப்படகுகளை உடைத்து விறகுகளாக விற்கும் அவலம்-வேதனையில் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரம் : இலங்கையில் அரசால் ஏலம் விடப்பட்ட படகுகள் உடைக்கப்பட்டு விறகுக்காகவும், பழைய இரும்பு தளவாடங்களாகவும் விற்பனை செய்யப்பட்டது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மீனவர்களின் ஏராளமான விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசின் உத்தரவை தொடர்ந்து, இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஏலத்தில் விட்டனர். ஏலம் விடப்பட்ட படகுகளில் 130 படகுகள் நீண்ட நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டிருந்ததால், துருப்பிடித்த நிலையில் இருந்தன. இவற்றை உடைத்து விற்பனை செய்ய ஏலம் எடுத்தவர்கள் முடிவு செய்தனர். இதன்படி குறிப்பிட்ட படகுகள் அனைத்தும் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடைத்து பிரித்தெடுக்கப்பட்டன. படகுகளை உடைத்து எடுக்கப்பட்ட மரக்கட்டைகள், பலகைகள் அனைத்தும் விறகுக்கு விற்பனை செய்யப்பட்டன. தற்போது இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகின் விலை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் தற்போது ஒரு கிலோ விறகு ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து, பிரித்தெடுத்த மரப்பொருட்கள், இரும்பு சங்கிலிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பொது சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அரசால் ஏலத்தில் விடப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்பட்டு விறகாகவும், பழைய இரும்பு சாமான்களாகவும் எடை போட்டு இலங்கையில் விற்பனை செய்யப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்