இலங்கை – ஆஸ்திரேலியா முதல் டி20ல் இன்று மோதல்

கொழும்பு: இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இலங்கையில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இந்த தொடர்களைத் தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று இரவு நடைபெறுகிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணியில்  வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், வேடு, ஸ்டாய்னிஸ், ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் என பலரும் கலக்க காத்திருக்கின்றனர்.தசுன் ஷனகா தலைமையிலான  இலங்கை அணி, சமீபத்தில் வங்கதேசத்துடன் நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும் அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் அசத்திய வனிந்து ஹசரங்கா டிசில்வா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குசால், பானுகா ராஜபக்ச, ரஜிதா, கருணரத்னே, சமீரா, தீக்‌ஷனா ஆகியோரும் அசத்தக் காத்திருக்கிறார்கள்….

Related posts

ஜிம்பாப்வே டி20 தொடரில் சுதர்சன், ஜிதேஷ், ராணாவுக்கு வாய்ப்பு

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே

யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்