இலங்கை அரசை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

ராமேஸ்வரம் : இலங்கை அரசு பழைய பேருந்து கூடுகளை கடலில் போடுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஏஐடியுசி மீனவர் தொழிற்சங்கத்தினர் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை வடக்கு கடல் பகுதியில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து துறையினரால் உபயோகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பழைய பேருந்து கூடுகளை கடலுக்குள் போடும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நமது மீனவர்களின் மீன்பிடித்தலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இதனை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். மீனவர் தொழிற்சங்கத்தினர் கடலில் இறங்கி இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் வடகொரியா, மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம், பாண்டி, லட்சுமி உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்….

Related posts

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்