இலங்கையில் உச்சகட்ட பதற்றம்: பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் கோத்தபய – ரணில் சிக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி மக்கள் மீண்டும் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு திடீரென வாபஸ் பெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது. மக்களின் போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து நேற்று இரவே அதிபர் மாளிகையை விட்டு குடும்பத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தப்பிய நிலையில் இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர், அதிபர் பதவி விலக பல்வேறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில்; இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். தற்போதைய அரசு தொடரவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பதவி விலகினார். அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அரசு அமைய வழிவிட்டு ராஜினாமா முடிவு எடுத்ததாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிபர் பதவி விலக கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் இலங்கையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. …

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!