இலங்கைக்கு கடத்திய ₹5 கோடி கஞ்சா பார்சல்கள் பறிமுதல்

ராமேஸ்வரம் : இந்திய கடல் பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின் உளளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தி செல்லப்படுகிறது. போதைப்பொருட்களை படகில் கடத்துவதற்கு பெரும்பாலும் பாக் ஜலசந்தி, தலைமன்னார் கடல் பகுதியையே கடத்தல்காரர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது இலங்கையில் இருந்து ஏராளமானோர் தமிழகத்திற்கு வருவதால், இதனை தடுக்கும் நோக்குடன் இலங்கை கடற்படையினர் இரவு பகலாக ரோந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்கள் அதிகளவில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் மண்டைதீவு கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் ரோந்து சென்றபோது தமிழக கடல் பகுதியில் இருந்து கடத்திய 500 கிலோ எடையுள்ள கஞ்சா பார்சல்களை கைப்பற்றினர். இலங்கையில் இதன் மதிப்பு ரூ.5 கோடி. கஞ்சா பார்சல்களை கைப்பற்றிய கடற்படையினர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்….

Related posts

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை