சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் வெளியிட்டார். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3.04கோடி ஆண் வாக்காளர்கள், 3.15கோடி பெண் வாக்காளர்கள், 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானநிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது….