இறந்தவர் உடலை 2 மாதம் கழித்து கொடுத்த விவகாரம் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: குன்றத்தூரை சேர்ந்த அலமேலு கொரனோ தொற்று பாதித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மே 22ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை எரித்து விட்டதாக அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம், அலமேலு உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், உடலை எரித்ததாக கூறி மருத்துவமனை ஊழியர்கள் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு உத்தரவிட்டது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு