இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை; சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து சவரன் ரூ. 38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,826-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,826க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று  சென்னையில் இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.18 சரிந்து, ரூ.5225.00 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ. 41,800 ஆகவும் வர்த்தகமாகிறது. மேலும், சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.73 ஆகவும், ஒரு கிலோ விலை ரூ.73,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!

மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை..!!