இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.37,816-க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,727-க்கும், சவரன் ரூ.37,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று ரூபாய் 4,733-க்கு விற்கப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 37,864-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராமிற்கு 6 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,727-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 48 ரூபாய் குறைந்து 37,816 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 24 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5,093-க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 40,744-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராம் ரூபாய் 68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 68,200-க்கு விற்கப்படுகிறது. வாரத்தின் முதல் நாளில் தங்கம், வெள்ளி குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது….

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி